முருகபூபதியின் “சொல்ல மறந்த கதைகள்” புத்தகம் மலைகள் பதிப்பக வெளியீடு.
இது கதை அல்ல கட்டுரை தொகுப்பு. இப்புத்தகத்தை விமர்சிக்க இயலாது.
இப்புத்தகம் நெடுகிலும் போருக்கு முந்திய இலங்கை அரசியலையும், போர் நடந்த
காலகட்டங்களில் இருந்த அரசியலையும் அவற்றுடன் பத்திரிகைகள் நிலையையும்
கூடவே இலக்கிய அன்பர்களையும் இயக்கங்களை சார்ந்தவரையும் ஆசிரியருக்கும்
அவர்களுக்குமிடையேயான நிகழ்வுகள் அத்துடன் உண்மை சம்பவங்கள் எல்லாம்
சேர்த்து தொகுத்திருக்கிறார்.
கட்டுரை தொகுப்பு முழுதும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை முறை, எழுபதுகளில் ஆரம்பித்து அவர்களது நிலை, இலங்கை கலாச்சாரம், அம்மக்களின் வட்டார வழக்கு, என்று ஒரு அழகிய தமிழை புத்தகம் நெடுகிலும் உணர முடிந்தது.
பிழிய பிழிய அழ வைக்க முயற்சிக்காமல் போரின் வலியை நடுநிலையோடு சொல்லி இருக்கிறார். இப்புத்தகம் உண்மையில் எனக்கு இலங்கை பிரச்சனையை முற்றிலும் நான் நினைத்திருந்த கோணத்தில் இருந்து வேறு கோணத்தில் பார்க்க உதவியது. போர் நிறுத்தி இருந்த சமாதான கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகள் இயக்க தலைவர்கள் சிங்கள ராணுவத்தினர் நடந்து கொண்டது ஆகியவற்றை சம்பவங்களாக தொகுத்து அதற்கு பின் இருந்த மனிதம் பற்றி ஆசிரியர் சொல்லியது போரை தாண்டியும் மனிதம் இருந்த மனிதர்களை உணர வைத்துள்ளது.
வியட்நாம் தேவதை கிம்புக்குடன் (வியட்நாம் மீது அமெரிக்க படை குண்டு வீசிய போது தீக்காயங்களுடன் நிர்வாணமாக ஓடி வந்து பதிமூன்று வயது சிறுமி) புத்தகத்தை முடித்திருகிறார். கிம்புக்கின் மூலம் ஆதிக்க நாடுகள் வளர் இளம் நாடுகளில் தொடுக்கும் போர்கள் மூலம் பாதிக்கப்படும் அப்பாவி பொது மக்கள் பற்றியும் கிம்புக்கின் சந்திப்பு பற்றியும் அவரின் உரையாடல் குறித்தும் எழுதிய கடைசி அத்தியாயத்தில் கொஞ்சம் கண் கலங்கி தான் போனது.

நடு நிலையான பார்வை
ReplyDelete////பிழிய பிழிய அழ வைக்க முயற்சிக்காமல் போரின் வலியை நடுநிலையோடு சொல்லி இருக்கிறார்///
ReplyDeleteநிறைய எழுதுங்கள் கமலி
ஏன் கமலி நிறைய எழுத மறுக்கிறீர்கள்?
Nice kamali
ReplyDelete