Friday, 6 February 2015

ஏரி - பிப்ரவரி கவிதை

நாரைகள் மீனை தேடி
நீருக்குள் அலகால் அலை எழுப்ப
அமைதியாய் இருந்த நீரின் மேல்
வட்ட வட்ட அலைகள் தோன்றி
முன்னும் பின்னும் நகர்ந்த
ஒரு பொழுதினில்
சலனமற்று பார்த்திருந்தேன்
கரையில் இருந்தபடியே ஏரியை

குளிர்ந்த காற்று தீண்ட
கண் மூடி லேசாக
மனதுக்குள் பயணிக்கும் நேரம்
பேசினாய் தொலைவிலிருந்து

பேசிய வார்த்தையின் அழகோ
தெளிந்த மனதின் நிலையோ
வார்த்தைகள் ஆன்மாவிற்குள்
வழுவி சென்றது.

அழியா ஓவியமாய்
நெஞ்சில் பதிந்தது ஏரி

காலங்கள் கடந்த பினனும்
ஏரிகளை கடக்கும்போது
ஆன்மாவிலிருந்து மேலெழும்பி
வரும் உன் குரல் காதுக்குள்
ரகசியமாய் காதலைசொல்லி
குறுஞ்சிரிப்பையோ
மென்சோகத்தையோ
நொடிபொழுதில் தந்து
மறைகிறது.

No comments:

Post a Comment