Monday, 23 February 2015

பிப்ரவரி கவிதைகள் 1

மனம் மலர்ந்து
உன்னில் நானும்
என்னில் நீயும்
கரைந்துவிட எத்தனித்த பொழுதுகளில்
பிரிந்திருக்கலாம்.

பொக்கிஷமாய்
சில நினைவுகளாவது
எஞ்சியிருக்க கூடும்.

*********************
உன் கையுடன் கைக்கோர்த்தபொழுதினில்
என்னுள் எழும்பிய உணர்வை
ஒரு மென் அழுத்தத்தில
உன்னுள் உணரவைத்த நொடியில்
என்னை உறையவைத்தது காதல்..

*******************

தோள் சாய்த்தாய்
அணைத்து தேற்றினாய்
ஆசைகள் துளிர்கக செய்தாய
கனவுலகில் மிதக்க செய்தாய்
கற்பனைகள் பூக்க செய்தாய்
நீ இல்லா உலகை வெறுக்க செய்தாய்
உனையன்றி உலகில் எனை நேசிக்க
யாருமில்லை என நினைக்க செய்தாய்
நீ இல்லாமல் வாழ மட்டும் வழி சொல்லாமல் விட்டுவிட்டாய்...

No comments:

Post a Comment