சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு
ஊர் பயணம். என் குழந்தைகள் இருவருக்கும் பள்ளி விடுமுறை. வீட்டில் இருந்து புறப்படும் போதே திட்டு..இவ்வளவு தான் மூட்டை கட்ட முடியுமா? இல்லை இன்னும் ஏதாவது பாக்கி வச்சிருக்கியா..உனக்கு என்ன அம்மா மகாராணி மாதிரி கைய வீசிட்டு போவ நான் இல்லை எடுத்துட்டு வரணும்..என்ன என்ன போர்ட்டர்னு நினைச்சியானு.. நான் வேணும்னா ஒரு பெட்டி இல்ல பை எடுத்துக்றேங்க (ஃபார்மாலிட்டிக்கு தான்) என்று முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு சொல்ல..
ஒண்ணும் வேணாம் பிள்ளைகளை பத்திரமா கூட்டிட்டு பேர் பார்த்து ஏறுனு ஒரு உறுமு உறும சரி இப்போ எது சொன்னாலும் டோஸ் விழும்னு பேசாம பசங்கள கூட்டிட்டு கம்பார்ட்மண்ட் பார்த்து ஏறி உட்கார்ந்தேன்.. இவர் மெதுவாக பின்னால் (திட்டிகிட்டே தான் வந்திருப்பாரு) வந்தார். அப்போது கூட்டத்தில் வந்த யாரோ ஒருவரின் ஸுட்கேஸ் வீலில் எங்கள் பை மாட்டி அவர் இழுத்து செல்ல என் கணவர் இருந்த இடத்திலிருந்து காலை மட்டும் முன்னே நகர்த்தி பையை இழுக்க முற்பட அப்போது எதிர்பாராதவிதமாக என் கணவர் பேண்ட் தையல்விட்டு விட்டது...உடனே என் கணவர் கையால் பையை கெட்டியாக பிடித்து கொண்டு ஸூட்கேஸ் ஆசாமியை நோக்கி குரல் கொடுத்து ஒரு வழியாய் பையை வாங்கிவிட்டார்..அங்கிருந்த ு
என்னை நோக்கி கோபமாக குரல் கொடுக்க..நான் ஏற்கனவே கம்பார்ட்மென்டில்
ஏறிவிட்டதால் பை மாட்டின டென்சன்ல தான் திட்றாங்க போலனு நினைச்சுகிட்டு
பசங்க பக்கம் திரும்பிகிட்டு எங்க சீட்ல போய் உட்கார்ந்துட்டேன் (எனக்கு
பேண்ட் தையல் விட்டது ஜோசியமா தெரியும்). அவர் அங்கேயே பை திறந்து மேலாக
இருந்த லுங்கியை எடுத்து கட்டினவுடன் தான் எனக்கு ஒரளவு விஷயம் யூகிக்க
முடிந்தது....
டென்ஷன்ல அவர் முகம் போன போக்கு. அவர் லுங்கிய எடுத்து பேண்ட் மேலேயே என்னை திட்டிகொண்டே கட்டிய விதம் ஆகியவற்றை பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கமுடியல..சிரித்தா நான் தொலைந்தேன். பசங்க பார்த்து சொன்னாலும் அவ்ளோ தான்..சீட்டுக்கு அடியில் ஏதோ தேடுறாப் போல குனிந்து சிரித்துவிட்டு கஷ்டபட்டு முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு அவர் கம்பார்ட்மெண்டில் ஏறும் போது பேக் வாங்கி சீட்டிற்கு எடுத்து சென்றேன்......ஒன்றும் பேசல.. அவர் ரியாக்சன் பார்க்க எனக்கு சிரிப்பு வேறு அடக்கமுடியல...அப்புறம் அவர் வேறு பேண்ட் மாற்றி கொஞ்சம் அசுவாசமடையும் வரை ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்தேன்...
ஊர் பயணம். என் குழந்தைகள் இருவருக்கும் பள்ளி விடுமுறை. வீட்டில் இருந்து புறப்படும் போதே திட்டு..இவ்வளவு தான் மூட்டை கட்ட முடியுமா? இல்லை இன்னும் ஏதாவது பாக்கி வச்சிருக்கியா..உனக்கு என்ன அம்மா மகாராணி மாதிரி கைய வீசிட்டு போவ நான் இல்லை எடுத்துட்டு வரணும்..என்ன என்ன போர்ட்டர்னு நினைச்சியானு.. நான் வேணும்னா ஒரு பெட்டி இல்ல பை எடுத்துக்றேங்க (ஃபார்மாலிட்டிக்கு தான்) என்று முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு சொல்ல..
ஒண்ணும் வேணாம் பிள்ளைகளை பத்திரமா கூட்டிட்டு பேர் பார்த்து ஏறுனு ஒரு உறுமு உறும சரி இப்போ எது சொன்னாலும் டோஸ் விழும்னு பேசாம பசங்கள கூட்டிட்டு கம்பார்ட்மண்ட் பார்த்து ஏறி உட்கார்ந்தேன்.. இவர் மெதுவாக பின்னால் (திட்டிகிட்டே தான் வந்திருப்பாரு) வந்தார். அப்போது கூட்டத்தில் வந்த யாரோ ஒருவரின் ஸுட்கேஸ் வீலில் எங்கள் பை மாட்டி அவர் இழுத்து செல்ல என் கணவர் இருந்த இடத்திலிருந்து காலை மட்டும் முன்னே நகர்த்தி பையை இழுக்க முற்பட அப்போது எதிர்பாராதவிதமாக என் கணவர் பேண்ட் தையல்விட்டு விட்டது...உடனே என் கணவர் கையால் பையை கெட்டியாக பிடித்து கொண்டு ஸூட்கேஸ் ஆசாமியை நோக்கி குரல் கொடுத்து ஒரு வழியாய் பையை வாங்கிவிட்டார்..அங்கிருந்த
டென்ஷன்ல அவர் முகம் போன போக்கு. அவர் லுங்கிய எடுத்து பேண்ட் மேலேயே என்னை திட்டிகொண்டே கட்டிய விதம் ஆகியவற்றை பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கமுடியல..சிரித்தா நான் தொலைந்தேன். பசங்க பார்த்து சொன்னாலும் அவ்ளோ தான்..சீட்டுக்கு அடியில் ஏதோ தேடுறாப் போல குனிந்து சிரித்துவிட்டு கஷ்டபட்டு முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு அவர் கம்பார்ட்மெண்டில் ஏறும் போது பேக் வாங்கி சீட்டிற்கு எடுத்து சென்றேன்......ஒன்றும் பேசல.. அவர் ரியாக்சன் பார்க்க எனக்கு சிரிப்பு வேறு அடக்கமுடியல...அப்புறம் அவர் வேறு பேண்ட் மாற்றி கொஞ்சம் அசுவாசமடையும் வரை ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்தேன்...
அப்புறம் இந்த டெய்லர் சரி இல்லை இனி வேற டைலர்கிட்ட பேண்ட்
தைக்க குடுக்கணும் இல்லங்க என சீரியசாக முகத்தை வைத்துகொண்டு அப்பாவியாய்
நான் சொன்னவுடன் அவரும் டென்ஷன்லாம் போய் சிரிச்சிட்டாரு.....அன்று முதல்
இன்று வரை ட்ரெஸ் எடுத்து வைக்கும்போது ஏங்க எதுக்கும் ஒரு வாட்டி கால
நல்லா நீட்டி செக் பண்ணிக்குங்க என சொல்ல தவறுவதில்லை... அவரும் என்
மண்டையில் குட்ட (செல்லமாக தான்) தவறுவதுமில்லை. :)
No comments:
Post a Comment