நானும் என் பெரிய மகனும் ஒரு முறை ATM -ல் பணம் எடுப்பதற்காக சென்றிருந்தோம்.. அந்த இடம் சற்று நெரிசலான இடம், பேங்க், ரிஜிஸ்தர் ஆபீஸ், எல்லாம் பக்கம் பக்கமாக இருக்கும் இடம்..என் பையன் பைக்கை பூட்டிவிட்டு வர இருவரும் சென்றோம் பணம் எடுத்துவிட்டு , பக்கத்தில் இருந்த ஒரு கடையில் போன் டாப்-அப் போட்டுவிட்டு திரும்பி பார்த்தல் எங்கள் பைக்கை காணவில்லை....
5 நிமிடம் கூட ஆகி இருக்காது ... எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..என் மகன் மா அப்பாக்கு போன் போடுமா என்று சொல்ல...நானும் போனில் என் கணவரிடம் விஷயத்தை சொன்னேன்.. எங்கு என்று கேட்டார்.. இடத்தை சொன்னேன்..என் கணவர் அங்கு நீங்கள் பைக் நிறுத்திய இடத்தில் நம் பைக் போல வேறு எதுவும் இருக்கா என கேட்க....(எனக்கு பைக் நம்பரே தெரியாது ) என் மகன் ஆமாம் பா என சொல்ல.. என கணவர் நீ அங்கேயே சற்று நேரம் இரு .. யாராச்சும் பைக் மாற்றி எடுத்து போய் இருப்பார்கள்.. வருகிறார்களா பார்.. இல்லை என்றால் நான் ஆபீஸ் விட்டு வந்தவுடன் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்யலாம்.. என்னோட அனுமானம் மாற்றி தான் எடுத்து போய் இருப்பர்கள்...பைக் பக்கத்திலேயே இரு..... பதட்டபட வேணாம் அம்மாவை வீட்டுக்கு போக சொல்.. நான் இன்னும் அரை மணியில் வந்துவிடுகிறேன் என்றார்கள்..
எனக்கு வீட்டிற்கு செல்ல மனமில்லை.. என் பையனுடன் நின்று கொண்டிருந்தேன் அந்த பைக் பக்கத்தில்.. அப்போது ஒரு கார் வந்து நின்றது..... காரில் இருந்து ஒரு வயதானவரும் ஒரு நடுத்தர வயது மனிதரும் எங்களிடம் வந்து உங்கள் பைக் எங்களிடம் தான் இருக்கு என பையன் தெரியாமல் மாற்றி எடுத்து வந்து விட்டான்.. வண்டலூர் அருகில் பைக் அடிபட்டுவிட்டது.. நான் அப்போது தான் கவனித்தேன் அது என்னுடைய பைக் இல்லை என்று.. நான் ரிஜிஸ்டர் முடித்து காரில் சென்றதால் அப்போது கவனிக்கவில்லை.. நீங்கள் எங்களுடன் காரில் வாருங்கள் உங்கள் பைக் ரிப்பேர் செய்து கொண்டிருகிறார்கள்.. முடிந்தவுடன் எடுத்து வந்து விடலாம் என்று சொல்லி அந்த பைக்கை அந்த நடுத்தர வயது மனிதர் எடுத்தார்.. வயதானவர் காரை ஓட்ட நானும் என மகனும் பின்னால் ஏறிவிட்டு ரொம்ப சந்தோசமாக என கணவரிடம் பைக் கிடைச்சிடுச்சு நான் வெங்கடேஷ் கூட போறேன் பைக் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொன்னவுடன் என கணவரிடம் வாங்கினேன் செம டோஸ்....
அறிவிருக்கா உங்க ரெண்டு பேருக்கும், கார் நம்பர் என்ன என்று கேட்க நான் " ஞே" என்று முழிக்க... காரில் யார் யார் இருகிறார்கள்... நீ எதற்கு அவர்கள் பைக் எடுத்து செல்ல அனுமதித்தாய். எங்கள் வண்டியை இங்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டு உங்கள் வண்டியை எடுத்து போங்கள் என்று சொல்ல வேண்டியது தானே... நான் காரில் ஒரு வயதானவர் மட்டும் தாங்க என்று சொல்ல .. காரில் எந்த வழிய வரீங்க.. பைக் எங்கு விபத்து நடந்தாக சொன்னார்கள்..அவர் பெயர் என்ன என்று கேள்வி மேல் கேள்வி கேட்க நான் தெரியாது என்று சொல்ல..சரி நீ காரை ஒட்டுபவரிடன் zoo கிட்ட நிறுத்த சொல்ல நான் அதற்குள் அங்கு வந்து விடுகிறேன்... அதற்க்கு மேல் கார் நிற்கவில்லை என்றால் வண்டி கதவை திற என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அவருடைய நண்பர்களுடன் ஆபீஸ் ஜீப் வாங்கி zoo பக்கத்தில் நின்று இருந்தார்.. நாங்களும் அங்கு வர.என்னை ஒரு முறை ..நான் வேறு பக்கம் திரும்பி கொண்டேன்...
ஒரு வழியாக பைக்கை மெக்கானிக் வந்து பழுது பார்த்து எங்களிடம் ஒப்படைத்து, அவர்கள் பேசி எல்லாம் நல்லபடியாக முடிந்து நாங்கள் வீட்டுக்கு வந்த பின் என் கணவர் சரியான டோஸ் .." நீ படிச்சிருகியே மூளைய கொஞ்சம் கூட யூஸ் பண்ண மாட்டியா.. யாராச்சும் வாங்க உங்க பைக் நாங்க வச்சிருகொம்ன உடனே அவங்க கூட போவியா.. பைக் காணா போன டென்ஷன் என்ன பண்ணலாம்னு யோசிக்ரதுகுள்ள நீ கார்ல முன்பின் தெரியாதவங்க கூப்ட்டாங்க போறேன்னு சொல்ற.. evening 4.30 மணில இருந்து மனுசன பைத்தியம் புடிக்க வச்சிட்ட.. நான் எதனு யோசிப்பேன்..என்று கத்த.. அமைதியாக உக்காந்திருந்தேன்....
என் சிறிய பையன் அப்பா பைக் காணோம்னு டென்ஷன் ஆனது சரி.. அம்மா கார்ல போனதுக்கு ஏன்பா டென்ஷன் ஆனீங்க... யாராச்சும் அம்மாவை கடத்திட்டு போயடுவங்கலோனா??? என்கிட்ட ஒரு வார்த்தை போன் பண்ணி இருந்தா நான் சொல்லி இருப்பேன்ல அப்படினான்.. என்னடா செஞ்சுருப்பனு அவங்க அப்பா கேக்க.. "அம்மாவா பத்தி தெரியாதவங்க யாரும் கடத்திட்டு போனா கூட அம்மா டென்ஷன் ஆகி ருத்ர தாண்டவம் ஆடறத பார்த்தா உங்க அட்ரெஸ் தேடி கண்டு புடிச்சு அம்மாவை உங்க கைல ஒப்படைச்சுட்டு சாஷ்டங்கமா உங்க கால விழுந்து கலியுக தெய்வம் சார் நீங்கன்னு கும்பிட்டு போவாங்க பா", னு சொல்ல... நான் கோபமாக பக்கத்தில் இருந்த ஸ்பூனை எடுத்து என் பையன் மீது வீசினேன்.. அவன் நகர சோபாவில் உட்கார்ந்திருந்த என் கணவரின் மண்டையில் விழ .. எனக்கு இது தேவை தான்னு அப்பாவியாய் சொல்ல........ நான் என்னத்த சொல்றது

No comments:
Post a Comment