நான் சந்தித்த மறக்க முடியாத மனிதர்கள் :
சென்னை புதிது அப்போது எங்களுக்கு ..என் சிறிய மகன் கைக்குழந்தை வயிற்று போக்கு நிக்காமல் அன்று சனிக்கிழமை வேறு மயிலாப்பூரில் டாக்டரிடம் காண்பிக்க மருந்து கொடுத்து சரியாகிவிடும் என்று அனுப்பிவிட்டார்கள்...ஆனால் மறுநாள் நிற்கவே இல்லை ஞாயிறு டாக்டர்களும் வரவில்லை...என்ன செய்ய என்று தெரியவில்லை...பெரிய மகன் அம்மா வீட்டில் வளர்த்ததால் எனக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது..இந்தளவு போன் தொடர்பும் அப்போது இல்லை ..என் கணவரும் நானும் செய்வதரியாமல் மனம் கலங்கி நிற்க எதிர் வீட்டு மாமி " தேவகி ஹாஸ்பிடல்" போ அங்கு கண்டிப்பாக யாராவது டாக்டர்கள் இருப்பார்கள் என்று சொல்ல நானும் கணவரும் சென்றோம்..
ஹாஸ்பிட்டலில் ட்ரிப்ஸ் ஏற்றவேண்டும் உடனே அட்மிட் செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்கள்... 3 மாத குழந்தை கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு நரம்பு எடுக்க ஊசியில் குத்த என்னையும் என் கணவரையும் வெளியே அனுப்பி விட்டார்கள் என் குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்க நாங்கள் இருவருமே அழ ஆரம்பித்துவிட்டோம்..பெரியவர்கள ், உறவினர்கள் யாரும் இல்லாத கொடுமை அப்போது தான் தெரிந்தது...என் பிள்ளையை பார்க்க பார்க்க அழுகை வேறு ட்ரிப்ஸ் தவிர பால், தாய்ப்பால் எதுவும் தரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.. இரவு பையன் கண் விழித்து பசியில் கத்துகிறான்..என்ன செய்ய என்று தெரியவில்லை நர்ஸ் போன் பண்ணி டாக்டரிடம் சொல்ல டாக்டர் பொட்டுகடலை மாவு கஞ்சி சிறிது உப்பு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம் என்று கூறிவிட்டார்...கீழே செல்ல கேண்ட்டீன் பூட்டி விட்டார்கள் என்று கணவர் சொன்னார் இரவு பதினோருமணி...ஆஸ்பிட்டல் விட்டு வெளியேயும் வர முடியாது குழந்தையோ அழுகிறது...நர்ஸ் கொஞ்சம் இருங்கள் என்று குழந்தை கையில் மருந்து ஏற்றி கொண்டு இருந்த ட்ரிப்ஸ் கழட்டி நீங்கள் அணையுங்கள் குழந்தையை நான் கஞ்சிக்கு எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று என் கணவரை கூட்டி கொண்டு சென்றார்...
அவர்கள் வரும் வரை என் குழந்தையை வைத்து கொண்டு தவித்தேன்...நர்ஸ் யாரையோ எழுப்பி எப்படியோ கஞ்சி செய்து எடுத்து கொண்டு வந்து குழந்தைக்கு கொடுக்க குழந்தை அழுகை நிறுத்தியது...நான் சோர்ந்துவிட்டேன் அழுதழுது..நர்ஸ் நீங்கள் இருவரும் ஓய்வெடுங்கள்.. விடியும் வரை உங்கள் குழந்தையை நான் பார்த்து கொள்கிறேன்...வயிறு நிரம்பிவிட்டது ட்ரிப்ஸ்ல மருந்தும் இருப்பதால் குழந்தை தூங்கும் என்று சொல்லி அவர் கூடவே இருந்து கவனித்து கொண்டார்..அந்த நர்ஸ் பெண் ஒரு கிறிஸ்துவ மலையாளி பெண்...
அதன் பின் குழந்தை படிப்படியாக சீரடைய அதற்குள் என் உறவினர்கள் வந்து விட்டார்கள் என்னையும் குழந்தையும் கவனித்து கொள்ள ஆனால் அந்த இரண்டு நாட்களும் அந்த பெண் ஆஸ்பத்ரியில் செய்த சேவை மறக்க முடியாதது...நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகும் போது என் கணவர் தனியாக அந்த பெண்ணிடம் பணம் கொடுக்க அவர் வாங்க மறுத்து விட்டார்...என் வேலைக்கு நான் சம்பளம் வாங்குகிறேன்...உங்கள் குழந்தை பசியில் அழுதது அதை பார்த்து நீங்கள் அழுதது எல்லாம் என் உணர்வையும் உலுக்கியது அது உணர்வு அதற்கு எல்லாம் பணம் கொடுத்து அதன் மதிப்பை குறைக்காதீர்கள் என்று சொல்லினார் ...நான் அந்த பெண்ணின் கையை பற்றி கொண்டேன் .. சம்பளத்துக்கு தான் வேலை செய்கிறார்கள் ஆனாலும் அதையும் தன வேலையின் பொறுப்பு உணர்ந்து செய்பவர்கள் எத்தனை பேர்....எந்த ஹாஸ்பிடல் சென்றாலும் அந்த பெண்ணை என் கண்கள் தேடும்...தேவகி ஹாஸ்பிடல் என்று ஏதாவது செய்தி கேட்டாலே அந்த பெண்ணின் முகம் தான் மனக்கண்ணில் வரும்.........
சென்னை புதிது அப்போது எங்களுக்கு ..என் சிறிய மகன் கைக்குழந்தை வயிற்று போக்கு நிக்காமல் அன்று சனிக்கிழமை வேறு மயிலாப்பூரில் டாக்டரிடம் காண்பிக்க மருந்து கொடுத்து சரியாகிவிடும் என்று அனுப்பிவிட்டார்கள்...ஆனால் மறுநாள் நிற்கவே இல்லை ஞாயிறு டாக்டர்களும் வரவில்லை...என்ன செய்ய என்று தெரியவில்லை...பெரிய மகன் அம்மா வீட்டில் வளர்த்ததால் எனக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது..இந்தளவு போன் தொடர்பும் அப்போது இல்லை ..என் கணவரும் நானும் செய்வதரியாமல் மனம் கலங்கி நிற்க எதிர் வீட்டு மாமி " தேவகி ஹாஸ்பிடல்" போ அங்கு கண்டிப்பாக யாராவது டாக்டர்கள் இருப்பார்கள் என்று சொல்ல நானும் கணவரும் சென்றோம்..
ஹாஸ்பிட்டலில் ட்ரிப்ஸ் ஏற்றவேண்டும் உடனே அட்மிட் செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்கள்... 3 மாத குழந்தை கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு நரம்பு எடுக்க ஊசியில் குத்த என்னையும் என் கணவரையும் வெளியே அனுப்பி விட்டார்கள் என் குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்க நாங்கள் இருவருமே அழ ஆரம்பித்துவிட்டோம்..பெரியவர்கள
அவர்கள் வரும் வரை என் குழந்தையை வைத்து கொண்டு தவித்தேன்...நர்ஸ் யாரையோ எழுப்பி எப்படியோ கஞ்சி செய்து எடுத்து கொண்டு வந்து குழந்தைக்கு கொடுக்க குழந்தை அழுகை நிறுத்தியது...நான் சோர்ந்துவிட்டேன் அழுதழுது..நர்ஸ் நீங்கள் இருவரும் ஓய்வெடுங்கள்.. விடியும் வரை உங்கள் குழந்தையை நான் பார்த்து கொள்கிறேன்...வயிறு நிரம்பிவிட்டது ட்ரிப்ஸ்ல மருந்தும் இருப்பதால் குழந்தை தூங்கும் என்று சொல்லி அவர் கூடவே இருந்து கவனித்து கொண்டார்..அந்த நர்ஸ் பெண் ஒரு கிறிஸ்துவ மலையாளி பெண்...
அதன் பின் குழந்தை படிப்படியாக சீரடைய அதற்குள் என் உறவினர்கள் வந்து விட்டார்கள் என்னையும் குழந்தையும் கவனித்து கொள்ள ஆனால் அந்த இரண்டு நாட்களும் அந்த பெண் ஆஸ்பத்ரியில் செய்த சேவை மறக்க முடியாதது...நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகும் போது என் கணவர் தனியாக அந்த பெண்ணிடம் பணம் கொடுக்க அவர் வாங்க மறுத்து விட்டார்...என் வேலைக்கு நான் சம்பளம் வாங்குகிறேன்...உங்கள் குழந்தை பசியில் அழுதது அதை பார்த்து நீங்கள் அழுதது எல்லாம் என் உணர்வையும் உலுக்கியது அது உணர்வு அதற்கு எல்லாம் பணம் கொடுத்து அதன் மதிப்பை குறைக்காதீர்கள் என்று சொல்லினார் ...நான் அந்த பெண்ணின் கையை பற்றி கொண்டேன் .. சம்பளத்துக்கு தான் வேலை செய்கிறார்கள் ஆனாலும் அதையும் தன வேலையின் பொறுப்பு உணர்ந்து செய்பவர்கள் எத்தனை பேர்....எந்த ஹாஸ்பிடல் சென்றாலும் அந்த பெண்ணை என் கண்கள் தேடும்...தேவகி ஹாஸ்பிடல் என்று ஏதாவது செய்தி கேட்டாலே அந்த பெண்ணின் முகம் தான் மனக்கண்ணில் வரும்.........
No comments:
Post a Comment