நாஞ்சில் நாடனின் சமீபத்திய சிறுகதைகள் தொகுப்பு "கான் சாகிப்" படித்தேன்.
ஆரம்ப கதைகள் பெரிதாக ஈர்க்கவில்லை. வட்டார வழக்கு பிடிபட சற்று நேரம்
எடுத்து கொண்டதோ என்னவோ. ஆனால் அடுத்தடுத்து கொஞ்சம் சுவராஸ்யமாக இருக்க
கடைசி இரண்டு கதைகளும் "வங்கணத்தின் நன்று வலிய வகை" கதையும் "இடைவெட்டு"
கதையும் படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை..
வங்கணத்தில் கதையில் ஒரு பதிப்பகத்தாருக்கும், எழுத்தாளரக்கும் நடக்கும் உரையாடல். எழுத்தாளரையும் பதிப்பகத்தாரையும் செய்திருக்கும் பகடி.. சான்சே இல்லை.. வட்டார வழக்கு கொள்ளை அழகு..அடுத்து இடைவெட்டில் செல்போன் உபயோகம் அவ்வளவாக தெரியாத ஒருவர் அதை வைத்து கொண்டு அவர் சந்திக்கும் பிரச்சனைகள என செம செம கலக்கல்..
ஆட தெரியாதவனுக்கு அறுபத்தேழு பெண்டாட்டி என்று செல்போன் இயக்க தெரியாதவனுக்கு அதன் பலன்கள் பற்றி தெரிந்தாவ போவது என்ன என்று..
ஒரு எப்.எம். ரேடியோவில் ஒரு கேள்விக்காக எழுத்தாளரான அவரிடம் பதில் கேட்டு ஆர் ஜே கேள்வி கேட்க குட் ஆப்டர் நூன், ஐ ஆம் பிரமோத் ஸ்பீக்கிங் ப்ரம் சலோ எப். எம் என துவங்க எதிர்முனையில் இவர்
" தாய்ளி, இப்பத்தான் எடின்பர்க்கில் இருந்து நேரா இறங்கி வந்திருக்கான், இங்கிலீஷ்ல கடுகு வறுக்கான்"..... இப்பம் பாரும் என அவருக்கு பதில் சொல்ல ஆரம்பிக்க படிக்கும் நமக்கு வயிறு புண்ணாகிறது. சிரித்து..
நாஞ்சில் நாடனை ரொம்ப பிடித்து இருக்கு, இன்னும் வாசிக்கணும்..எளிமையான கதை களம் அதை சுவை பட ரசிக்குமாறு எழுதி இருக்கிறார்...

No comments:
Post a Comment