Tuesday, 2 December 2014

குறைவில்லை

உலக மயமாக்கப்பட்ட நாட்டில்
விளம்பரங்களுக்கும் மூளை சலவைக்கும்
குறைவில்லை.

கடவுளின் பெயரால் மதத்தலைவர்களின்
மனதை மயக்கும் வார்த்தைகளுக்கும், மூளை சலவைக்கும்
குறைவில்லை


நாளைய உலகமே நம் கையில் என்ற
அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளுக்கும்
பஞ்சமில்லை.

ஆசைகளுக்கும் நிராசைகளுக்கும் நடுவே
தினம் தினம் பயணிக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதாக
கல்லா கட்டும் தியான முகாம்களுக்கும் பஞ்சமில்லை.

காதலின் பெயரால் ஏமாற்றப்படும்
ஆண் பெண் குமுறல்கள் உணர்வு குழப்பங்கள்
ஆதி காலம் தொட்டு தீர்ந்தபாடில்லை.

அறிவியலால் விளக்க முடியா விளக்கங்கள்
ஆன்மீகத்தால் புரிய வைக்க முடியா குழப்பங்கள்
இலக்கியத்தால் தீர்க்க முடியா சர்ச்சைகள்
ஓய்ந்தபாடில்லை.

ஆனாலும்
மெல்ல வருடும் மென்காற்றும்
பரபரப்பான காலையில்
மென் இறகென காதில் நுழையும்
மென் இசை கொடுக்கும் சுகமும்
மழலையின் மனதை
மனதுக்கு கொடுத்து
குதூகலிக்க செய்து கொண்டே தான் இருக்கிறது..

1 comment:

  1. உலகமயமாக்கலின் மிகப்பெரிய பலம் விளம்பரங்களின் மூலம் நம்மை வாங்கத்தூண்டுவதே. இதில் பலியாகிக்கொண்டே மக்கள் தங்களுடைய சிறு பொருளையும் காவு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
    தன்னுடைய விளம்பரங்களினால் சரியானதுதான் என்ற மாயத்தை தோற்றுவித்து மக்களை சுரண்டுவார்கள்.

    ReplyDelete