இன்பாக்ஸ் அலப்பறைகள்:
குட் மார்னிங். குட் நூன், குட் இவினிங், குட் நைட் ல ஆரம்பித்து காலை வணக்கம்,மாலை வணக்கம் இரவு வணக்கம் என்று சளைக்காமல் அனுப்புவது இந்த குட் மார்னிங், காலை வணக்கம் எல்லாம் அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து சொன்னால் அட்லீஸ்ட் பிரமோசனின் போது அவர் உங்களை நினைவு கூற உப்யோகாமாக இருக்கும்.. நான் எனக்கு சாட்டில் விருப்பமில்லை, எனக்கு வணக்கங்கள் எல்லாம் வேண்டாம் என்று சொன்ன பின் அதை நிறுத்தி கொண்டவர்கள் உண்டு. அதன் பின்னும் தொடர்ந்து அனுப்புபவர்களை நான் பெரும்பாலும் கண்டு கொள்ளாமல் தான் செல்கிறேன்.. ஒருவருக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தால் அவர்கள் அனைவர்க்கும் ஒருவர் வணக்கம் சொல்ல ஆரம்பித்தால் வணக்கம் தவிர வேறு எந்த பதிவும் போட முடியாது.. நான் எழுதும் பதிவுகள் எல்லாம் பத்தி பத்தியாக தான் இருக்கும் அதுவும் பெரும்பாலும் அப்படியே கூகுள் இன்புட் டூல்ஸ் மூலம் தமிழில் மாற்றி என் டைம்லைனில் டைப் செய்து அப்படியே போஸ்ட் செய்வேன். அப்படி இருக்க தொடர்ந்து அந்த நேரத்தில் பாப் அப் ஆகும் மெசேஜ் சில நேரங்களில் எரிச்சல் மனநிலையே கொடுக்கிறது.. கூடுமானவரை என்னிடம் பதிவு தொடர்ப்பாக திருத்தம் சொல்பவர்களுக்கு, அல்லது ஏதாவது பகிர நினைப்பவர்களிடம் என்னை மதிப்பவர்களுக்கு நான் பதில் அளிக்கவே செய்கிறேன். ஆனால் இந்த வணக்கங்கள், சாப்ட்டியா? நல்லா இருக்கியா? இதை எல்லாம் தவிர்த்து விடுலாமே வணக்கம் சொல்றது ஒரு குத்தமா என்று கேட்கும் முன் அது அவசியமா என்று கேட்டு பார்த்து கொள்ளுங்கள்... |
|
இன்பாக்ஸ் அலப்பறைகள் :
இந்த வகை பக்கா சைக்கோக்கள். கோழைகள். நம் நட்பு வட்டத்திலேயே இருக்க மாட்டார்கள். சொந்த படம் ப்ரோபைலில் இருக்காது. படித்தது சென்னை யுனிவர்சிட்டியாக இருக்கும். இருப்பதாக சொல்லி கொள்வது நாம் கேள்விப்படாத ஊராக இருக்கும் . ஆனால் இன்பாக்ஸ்க்கு மெசேஜ் அனுப்புவார்கள். அதை பார்த்தவுடனே தெரிந்துவிடும் பக்கா லோக்கல் என்று..
உன்னை தெரியாதா நீ பெரிய இவளா அவளா என்றோ இல்லை ஆரம்பத்திலயே பச்சை பச்சையான வார்த்தைகள் குறித்தோ. பெரும்பாலும் மெசேஜ் பார்த்தவுடன் ப்ளாக் செய்துவிடுவோம். அப்படி இருந்தும் எனக்கு நாப்பது பேக் ஐடி இருக்கு தெரியுமா நான் உன்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் நீ ப்ளாக் செய்தா பெரிய இவளா என்ற ரீதியில் வேறு ஐடியில் இருந்து மெசேஜ் வரும். . ஒருவர் நாப்பது ஐடி வைத்து கொண்டு இயக்குகிறேன் என்றாலே அவரின் லட்சணம் தெரிந்துவிடும். ஒரு பெண்ணிடம் பேச முகம் காட்ட தைரியமில்லாத ஆணுக்கு இருக்கும் வீரம் ஆண்மை கண்டு அப்படியே மெய் சிலிர்த்துவிடும்.. :) :) :)
உனக்கு தான் பொழப்பு இல்லை இல்லை வக்கிரத்துக்கு வடிகால்னு கொட்டிக்கிட்டு இருக்கே வக்கிரத்தைனா அதை எல்லாம் கேட்டு டென்சன் ஆக நாங்க என்ன முட்டாள்களா??? அதையும் ஒரு ஸ்டேட்ஸ் போட்டுட்டு போயிட்டே இருப்போம்ல..எங்ககிட்டேயா :) :) :) :)
No comments:
Post a Comment