Friday 6 February 2015

முதல் சந்திப்பு - பிப்ரவரி கவிதை

முதல் சந்திப்பு
எப்போதும் நிரம்பி வழியும்
பேருந்து நிறுத்தம்

லேசாக தூறலுடன்
ஆரம்பித்தது மழை
சாரலுடன் மெல்ல பேச துவங்கினோம்
மழையும் மெல்ல மெல்ல
வேகமெடுத்தது
குடைக்குள் அடங்கிடா மழை.


இயற்கையே ஆசீர்வதித்தது போல்
எதிரில் இருப்பவர் தெரியாதளவு
பக்கத்தில் உள்ளவர் காதில்
பேசுவது விழாதளவு
பேரிரைச்சலுடன் பெருமழை
இருவரும் பேசினோம்

பேசுகிறோம் என்பதன்றி
வேறு நினைவில்லை
சுற்றி உள்ள உலகும் தெரியவில்லை
நாம் மட்டுமே எல்லாமாக
மழையுடன் சேர்ந்தே
மனதால் கலந்தோம்

இன்றும் பெய்யும் கனமழையில்
பேருந்து நிறுத்தத்தில் பேசி கொண்டிருக்கும்
காதலர்களிடம் எனை கண்டு
புன்னகை பூத்து
மெல்ல கடக்கிறேன்
உன் நினைவுகளோடு.

No comments:

Post a Comment