ருஷ்ய
அமர இலக்கிய வரிசை " சோவியத் சிறுகதைகள்" தொகுப்பு வாசித்தேன். பெரிய
பெரிய நாவல்கள் கொடுக்கும் தாக்கத்தை கவிதை போலும் சில சிறுகதைகள்
கொடுத்துவிடுகின்றன... ஒவ்வொரு கதையும் வாசித்து முடித்த பின் அதன்
தாக்கத்திலிருந்து வெளி வர அதிக நேரம் பிடித்தது. அந்த தொகுப்பில் மொத்தம்
எட்டு சிறுகதைகள் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அதில் இரண்டு கதைகள்
சுமார் ரகம் என்னளவில்.. மற்ற ஆறு கதைகளும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது..
பரீஸ் கர்பாதவ் எழுதிய " வெள்ளரி நிலத்தின் பிள்ளை பேறு" சிறுகதை. அவ்வளவாக மருத்துவ வசதி இல்லாத ஒரு தீவில் ஒரு பெண்ணுக்கு பிள்ளை பேறு சிக்கலாக ரேடியோ மூலம் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் சொல்ல ஒரு அனுபவமில்லா மருத்துவர் ரேடியோ மூலம் வரும் உத்தரவை கொண்டு பிரசவம் பார்க்கிறார். கதை நடந்த காலக்கட்டத்துக்கு நம்மால் செல்ல முடிவது தான் எழுத்தின் வெற்றி. வ்லேந்தீன் கத்தாயேவ் எழுதிய "எங்கள் பிதாவே" சிறுகதை. பாசிஸ்டுகள் கொடுமையால் ஒரு யூத தாயும் மகனும் நகரம் முழுதும் தங்களை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்று சுற்றுவதும். கடைசியில் போகுமிடம் தெரியாமல் ஒரு பூங்காவில் தங்கி குளிரால் விறைத்து காலை பிணமாக இருவரும் அள்ளி வண்டியில் போடப்படுவதுடன் கதை முடிந்து இருக்கும். காலை அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒலிக்கும் பரலோகத்தில் இருக்கும் பிதாவே அவர்கள் பிணமாக வண்டியில் தூக்கி போடும் போதும் ஒலிக்கும்..மனதை பிசைய செய்தது. இந்த கதை கொடுக்கும் தாக்கத்தில் இருந்து வெளிவருவது ரொம்ப கடினம்.. அலெக்சேய் தல்ஸ்தோய் எழுதிய ருஷ்ய இயல்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. போரில் தன் முகத்தை சிதைத்து கொண்ட ஒருவன் அவன் வீட்டுக்கு வருகிறான். ஆனால் தன் தாயிடம் பிள்ளை என்று அறிமுகபப்டுத்தி கொள்ளாமல் அவன் நண்பன் என்று சொல்லி கொண்டு ஒரு நாள் தங்குகிறான். அவன் காதலியிடமும் அவ்வாறே. ஆனால் அவனால் பொய்யாக இருக்க முடியவில்லை.. ராணுவத்துக்கே திரும்பி விடுகிறான். அவன் தாய் எழுதும் ஒரு கடிதம் அவனை உலுக்க அதன் பின் தாயும் காதலியும் அவனுடன் வந்து இணையும் கதை "ருஷ்ய இயல்பு" மட்டுமல்ல. உணர்வுபூர்வமான அம்மா, காதலியின் உணர்வுகள் எல்லா நாடுகளிலும் ஒன்று தான் என்று சொல்லாமல் சொல்லியது.. கன்ஸ்தாநதீன் பவுஸ்தோவ்ஸ்கய் எழுதிய இசைஞரின் பரிசு ஒரு இசை கலைஞரின் காதலை கவிதையாக சொல்கிறது. யூரிய நகீபன் எழுதிய "கமரோவ்" ஒரு நான்கு வயது சிறுவனின் உலகத்துக்குள் உலவி ரசிக்கும் ஆசிரியர் நம்மையும் அந்த சிறுவனின் உலகத்துக்கு அழைத்து சென்று விடுகிறார். கதை வாசித்து முடித்த பின்னும் "கமரோவ்" உங்களுடன் என்றும் பயணிப்பான். செர்கெய் அந்தோனவ் எழுதிய காலையும் ஒரு காதல் கதை. அந்திரேய் பிளதோனளின் எழுதிய என்ஜின் ட்ரைவர் பற்றிய கதை உளவியல் சார்ந்த கதை. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் வாசித்தேன். பரீஸ் பொலிவோய் எழுதிய காதல் கதை. உள்ளுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தாமல் எப்போதும் முட்டி கொண்டே இருக்கும் இருவரில் அந்த ஆண் அடிப்பட்டு கிடக்கும் போது அந்த பெண் கதறி அழும்போது அவர்களின் காதல் அவர்களுக்கே தெரிவது என்று வழக்கமான கதையை அழகிய நடையில் சொல்லி இருக்கிறார். |
|
Wednesday, 26 November 2014
ருஷ்ய சிறுகதைகள் தொகுப்பு
"கிளியோபாட்ரா" ஆசிரியர் முகில்
கிழக்கு பதிப்பக வெளியீடான “
கிளியோபாட்ரா “ முகில் எழுதியது... இவருடைய “ யூதர்கள்” வாழ்க்கை வரலாறு
புத்தகம் போன வருடம் கண்காட்சியில் வாங்கி வாசித்து இருக்கிறேன்.. எழுத்து
நடையும் அதில் தொகுக்கப்பட்டு இருந்து வராலாற்று குறிப்புகளும் யூதர்களின்
வாழ்க்கை முறையை இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையின் வேர் எங்கிருந்து
என்பது வரை அறிந்து கொள்ள முடிந்தது..
அதனால் “கிளியோபாட்ரா” முகில் எழுதியது என்றவுடன் வாங்கி விட்டேன்.. நேற்று மாலை வாசிக்க தொடங்கி இன்று காலை வாசித்து முடித்துவிட்டேன்.. கிளியோப்பட்ரா அழகி என்பதால் சீஸர், ஆண்டனி உட்பட மன்னர்கள் அவள் அழகில் அடிமைகளாக சாம்ராஜ்யம் இழந்ததாக வரலாற்றில் ஒற்றை வரியில் தெரியும்..

ஆனால் அதற்கு பின் இருந்த அந்த எகிப்திய அரசியின் ஆளுமை, தான் சொல்வதை
மற்றவர்களை ஏற்றுகொள்ள செய்யும் சொல் வலிமை, அன்பால் காதலால் அடிபணிய
செய்யும் வித்தை எப்படி நடந்துகொண்டால் காரியம் நடக்கும் என்ற
புத்திகூர்மை. அவளது வாசிப்பு அறிவு..(எகிப்தியன் உட்பட ஆறு மொழிகள் சரளமாக
பேச எழுத கற்றவள்) இவை எல்லாம் தான் அவளை பேரழகியாக உலகம் போற்ற செய்து
இருக்கிறது.. அவளை பற்றிய ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்
எகிப்திய மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறாள்... அவள் இறந்து இத்தனை
வருடம் கழித்தும் இன்னும் அவரின் புகழ் மங்காமல் அவரை பற்றி இன்னும் வியக்க
பேசவும் ஆராயவும் வைத்து கொண்டு இருப்பதே அவரின் ஆளுமையை காட்டுகிறது...
வாசிக்க வேண்டிய புத்தகம்....
"தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை" - ஆசிரியர் அ. முத்துலிங்கம்
உலகின் பல நாடுகளை பணி நிமித்தமாக சுற்றி வந்திருக்கும் ஆசிரியர் அங்கு வாழ்ந்த மனிதர்கள் அவர்கள் கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் பற்றி சுவைபட இந்த புத்தகத்தில் கூறுகிறார் ...அதில் மேற்கு ஆப்பிரிக்கா பற்றி அவர் கூறியிருக்கும் இரண்டு சம்பவங்கள் அவரை மட்டுமல்ல நம்மையும் அதிசயிக்க வைக்கிறது...
ஆப்பிரிக்காவுக்கு வேலை நிமித்தமாக சென்ற போது எனக்கு ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி சொல்லி மாளாது. மேற்கு நாடுகளில் அதிர்ச்சி அவ்வளவு சொல்லும் படியாக இருக்காது. புத்தகங்கள் வாயிலாகவும் சினிமா வாயிலாகவும் நாம் நிறைய அறிந்துவைத்திருப்பதால். நான் மேற்கு ஆப்ரிக்காவில் நேரில் பார்த்து அதிசயித்த இரண்டு சம்பவங்களை சொல்கிறேன்.
ஒரு கடையில் வேலை பார்த்த இந்தியர் இறந்துவிட்டார். இங்கு இறந்தவர்களை சில நாட்கள் வைத்துவிட்டுப் பிறகு தான் புதைப்பார்கள். இந்தியரின் பிணத்தை இறந்த அன்றே மயானத்தில் எரித்துவிட்டார்கள். இதை பார்த்து ஆப்பிர்க்கர்கள் மிரண்டு போனார்கள். எட்டத்தில் நின்று பார்த்தார்கள். அவர்கள் கண்கள் குத்திக்கொண்டு நின்றன.

ஒரு ஆப்பிரிக்கர் பிறகு என்னிடம் பேசினார். இந்த இந்தியர்கள் மிகவும்
கொடுமைக்காரர்கள். ஈவு இரக்கம் இல்லாதவர்கள், விறகுக்கட்டை எரிப்பது போல
எரித்து தள்ளி விட்டார்கள். எங்கள் கிராமத்தில் மூன்று நாலு நாட்களாவது
வைத்து மரியாதை செய்வோம். பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் இருதயத்தையோ ,
ஈரலையோ ஒரு சிறு பகுதி எடுத்து உட்கொள்வோம். அப்போது அவர்கள் என்றென்றும்
எங்களுடன் ஐக்கியமாகி விடுவார்கள் அல்லவா? இந்த சிறு மரியாதை கூடவா
மரணித்தவருக்கு செய்ய முடியாது என்றார். நான் என்னத்தை சொல்வது?
இன்னொரு சம்பவம். நான் வசித்த இடத்தில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் வைரங்கள் விளைந்தன. ஆற்று படுகையில் இவை விளைந்ததால் கிராமத்தவர்கள் சிறு சிறு கும்பலாக கூடி அரித்து எடுப்பதை பார்க்கலாம். ஒரு முறை காரில் செல்லும்போது இப்படி மூன்று இளம் பெண்கள் ஆற்றில் கரையில் அரித்தபடி நின்றார்கள். மேலே ஒரு சட்டையும் கீழே லுங்கி போல ஒரு லப்பாவை அணிந்து கொண்டு. அது அழகான காட்சியாக இருந்தது. மொழிபெயர்ப்புகக்காக சாரதியையும் அழைத்து கொண்டு படம் எடுக்கும் நோக்கத்துடன் அவர்களிடம் போனேன். அவர்கள் வெட்கப்பட்டு நெளிந்தார்கள். இது பெரிய ஆச்சரியம். ஏனென்றால் அப்படி வெட்கப்படுவது அங்கே வழக்கமில்லை..
பிறகு விஷயம் புரிந்தது. மரத்தின் பின்னே சென்று சர்ட்டை கழற்றிவிட்டு இயற்கையான பிறந்த அழகுடன் சிரித்தபடி போஸ் கொடுத்தார்கள். அவர்களுக்கு வெட்கமே இருக்கவில்லை.. வேலை செய்வதற்காக அவர்கள் அணிந்தது சர்ட். அசிங்கமாக அதை அணிந்தபடி படத்தில் காட்சி தர அவர்கள் விரும்பவில்லையாம்.

"முதல் ஆசிரியர்" - புத்தகம்
“முதல்
ஆசிரியர்” சிங்கிஸ் ஐத்மாத்தவ், சோவியத் கிர்கீஸிய எழுத்தாளர், தமிழில்
பூ. சோமசுந்தரம். கிர்கீசிய கிராமத்து பள்ளிக்கூட கட்டிட திறப்பு
விழாவிற்கு வருகிற கல்வித்துறை அறிஞர் “அல்டினாய்” விழாவிலிருந்து
குழப்பமும், தடுமாற்றமுமாக வெளியேற அதே விழாவிற்கு வந்த ஓவிய ஆசிரியர்
இளைஞர் அவரின் பதற்றம் காராணம் கேட்க மௌனமாக சென்ற அல்டினாய் சில நாட்களில்
எழுதுகிற தன வரலாற்று கடிதத்தின் மூலம் நாவல் வளர்ந்து முடிகிறது.
துய்ஷேன் என்ற கம்யூனிஸ்ட் இளைஞர் கிர்கிஸ்தான் மக்களிடம் படிப்பின் அவசியத்தை சொல்லி இவ்வளவு நாள் அடிமைகளாக இருந்தோம் இனி அடிமையாகாமல் இருக்க கண்டிப்பாக படிப்பு அவசியம் தேவை அதற்காக தனக்கு தெரிந்த அடிப்படை கல்வியை எழுத படிக்க தெரிந்ததை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க விரும்புவதாக ககூற கிராமத்தில் இடம் கூட தர மறுக்கின்றனர். எதற்கு படிப்பு அதெல்லாம் அதிகாரிகளுக்கு தான் விவசாயத்தை நம்பி இருக்கும் நமக்கு அதெல்லாம் அவசியம் இல்லாதது இதற்கு எல்லாம் செலவளிக்க தயாரில்லை என்று சொல்ல குன்றின் மீது இருக்கும் குதிரை கொட்டகை போதும் அதை சீர் பண்ணி குடுங்கள் என்று சொல்ல அதற்கும் மக்கள் ஒத்துழைப்பு தர மறுக்க தனி ஒருவராக அந்த கொட்டகையை சீர் செய்து கிராமத்து பிள்ளைகளை எல்லாம் பள்ளிக்கு தினமும் வந்து கூட்டி செல்கிறார்.
அல்டினாய் பதிமூன்று வயது சிறுமியாக அப்பா அம்மா இல்லாமல் சித்தப்பா சித்தி வீட்டில் வளரும் சிறுமி. அவர்களின் கொடுமையில் மூச்சு திணறி கொண்டிருந்தவளுக்கும் போராட்டத்துக்கு பின் பள்ளிக்கூடம் போக முடிகிறது.. கடும் பனியிலும் பல கஷ்டங்களை எதிர்கொண்டு பிள்ளைகளுக்கு தன்னால் இயன்ற அளவில் தனக்கு அவசியம் என்ற பட்ட முறையில் உள்ளுணர்வு என்ன கூறுகிறதோ அதன்படி படிப்பு சொல்லி தருகிறார். அவர் செய்தது ஒரு வீரச்செயல் கிராமத்தை விட்டு வெளியில் எங்குமே செல்லாத, பரம்பரை பரம்பரையாக படிப்பறிவே இல்லாத கிர்கீசிய குழந்தைகளுக்கு அந்த கிராமத்தை தாண்டி உலகம் இருக்கு என்பதை பேச்சிலும் கதையிலும் படிப்பிலும் துய்ஷேன் குழந்தைகள் மனதில் ஆழ பதிய வைத்தார்.
உடலை இறுக செய்யும் உயிரை குளிர வைக்கும் பனிக்காலம் வந்தாலும் அதை தாண்டி வசந்தம் வரும் என்ற துய்ஷேன், அல்டினாய் நம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக் அல்டினாய் எழுத படிக்க கற்கிறாள். இதறகிடையில் அவள் சித்தி அவளுக்கு மாப்பிளை பார்த்து அதுவும் இரண்டாம் தாரமாக ஒரு முரட்டு பண்ணையாருக்கு கட்டி வைக்க முற்பட துய்ஷேன் அவள் சித்தியிடம் அவள் குழந்தை அவளுக்கு எப்படி திருமணம் என்று சண்டையிட்டு அவளை பள்ளிக்கூடத்திலேயே தங்க வைத்து அவளை அந்த சோகத்தில் இருந்து மீட்க இரண்டு பாப்ளார் மரக்கன்றுகளை நட்டு அவளிடம் பேசும் இடம் கவிதை. காலங்கள் உருண்டோட கதை தூரத்தில் இருந்து தெரியும் அந்த பாப்ளார் மரத்தின் மூலம் தான் உயிர்பெறுகிறது..
துய்ஷேனை அடித்து அல்டினாவை தூக்கி சென்று விடும் முரட்டு பண்ணையார் அவளை பலாத்காரம் செய்ய இரண்டு நாளில் அவள் உடலில் வலுவில்லாமல் சுருண்டு விட ஆனால் மனதில் இங்கிருந்து தப்பியோட வேண்டும் அல்லது சாக வேண்டும் அடங்கி மட்டும் போக கூடாது என்று தப்பிக்க முயற்சிக்க இதனிடையில் துய்ஷேன் காவலர்களுடன் வந்து அவனை கைது செய்து இவளை மீட்டு கூட்டி செல்கிறார்.
வரும்வழியில் அவளை ஆற்றில் இறங்கி சோப்பு தந்து குளிக்க சொல்லும் ஆசிரியர் நடந்ததெல்லாம் மற அதை திரும்ப நினைச்சு பார்க்காதே குளி பாரம் குறையும் என்று சொல்லி குதிரையை மேய்க்க கூட்டி போகிறார். இரண்டு நாள் கழித்து புகைவண்டி நிலையம் அழைத்து செல்லும் அவர் தாஸ்கன்ட் நகரிலிருக்கும் அநாதைக குழந்தை இல்லத்திற்கு அனுப்பப்பட்ட சில குழந்தைகளோடு ஒரு ருஷ்ய பெண்மணியோடு அனுப்புகிறார்.
இறுதியாக் அங்கே அவர் அஸ்தினாவிடம் நீ ஓரடி கூட என்னை விட்டு பிரிய விடமாட்டேன் ஆனால் உனக்கு குறுக்கே நிற்க எனக்கு உரிமையில்லை நீ படிக்க வேண்டும். எனக்கொன்றும் அதிக படிப்பறிவு கிடையாது நீ புறப்பட்டு போ. நீ ஒரு நல்ல ஆசிரியராகலாம். இதோ இப்ப கிளம்ப போறே என்று நடுங்கும் குரலில் சந்தோசமா இரும்மா அஸ்தினாய் முக்கியமானது என்னன்னா படி படி என்று சொல்ல அஸ்தினாய் துக்கம் தொண்டை அடைக்க அழுகிறாள். நாம் நட்டோமே பாப்ளார் மரக்கன்றுகள் அவற்றை நான் பார்த்துக்குறேன் நீ பெரியவளாகி வரும்போது அவை எவ்வளவு அழகாக மாறுகிறது என்று பார் என்று சொல்லி அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு ரயில் புறப்படும் போது “அஸ்தினாய்” என்று மனதின் அடியாழத்தில் இருந்து கத்தும் குரல் அஸ்தினாவின் காதில் மட்டுமல்ல நம் காதிலும் ரீங்காரிக்கிறது.
எவ்வளவோ இடர்பாடுகளை சநதித்து படித்து ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து கிராமத்துக்கு வந்து துய்ஷேனை விசாரிக்க அவர் நடக்கும் யுத்தத்தில் பங்கேறக சென்றுவிட்டதாக கூற அவரை பற்றி எந்த தகவலும் இல்லாமல் போக கிராமத்துக்குள் போகாமலே திரும்புகிறாள்.அவர் இறந்தாரரா உயிரோடு இருக்கிறாரா என்று தெரியாமல் காலம் உருண்டோட ஒரு முறை ரயிலில் பயணிக்கும்போது விளக்கு காண்பிக்கும் ஒருவர் அவர் ஜாடையில் தெரிய ரயிலின் அவசர சங்கிலியை பிடித்திழுத்து இறங்கி கதறி ஓடி வர அவர் வேறு யாரோவாக இருக்க மனதில் சுருண்டு விழுகிறாள். அதன் பின் திருமணம், குழந்தைகள் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள், தத்துவஞானத்தில் டாக்டர் பட்டம் பெறுகிறாள் பல இடங்களுக்கு செல்லும் அவள் கிராமத்திற்கு மட்டும் போகவில்லை.
அதன் பின் பள்ளி திறப்பு விழாவிற்கு வரும்போது துய்ஷேன் உயிரோடிருப்பது தெரியவர குற்ற உணர்வில் கூனி குறுகி உடனே புறப்படுகிறார். பள்ளிக்கு அவரின் பெயர் தான் வைக்க வேண்டும் நான் மீண்டும் வருவேன் அவரை சந்திப்பேன் என்பதாக சொல்லி நிறைவு செய்கிறார் கடித்ததை.. சிறிய நாவல் தான் ஆனால் அதன் தாக்கம் என்னுள் இருக்கிறது.. நமக்கு இன்று சாதாரணமாக கிடைக்கும் விஷயங்களுக்கு பின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும், காதலும், கருணையும் மனிதமும் நிறைந்த மனிதர்களின் போராட்டமும் வலியும் நிறைந்திருக்கிறது என்று நம்மை யோசிக்க வைக்கும் கதை.

Monday, 24 November 2014
தெரியாதது
கரை தொட்டு விளையாடும் அலைகள்
எப்போதும் சொல்வதில்லை
ஆழ்கடலில் புதைத்து குமைந்து கொண்டு
கொண்டிருக்கும் எரிமலையை பற்றி
எப்போதும் சொல்வதில்லை
ஆழ்கடலில் புதைத்து குமைந்து கொண்டு
கொண்டிருக்கும் எரிமலையை பற்றி
தேவைகள்
தன்னை மறக்கும் காமம்
தேவையில்லா பொழுதுகளிலும்
விழி பார்க்கும் விழிகளும்
அது பேசும் மௌன மொழிகளும்
கன்னம் தாங்கி மூக்கை திருகி
விரல்களால் முகம் வருடி தரும்
மென் முத்தங்களும்
மயிலிறகால் தடவுவது போல்
தலை தடவி இறுத்தி
தோள் சாய்த்து
மார்பில் முகத்தை புதைத்து கொள்ளும்
அணைப்பும்
முதுகு முழுதும் பரவும் அழுத்தமும்
தேவையாக இருக்கிறது
தேவையில்லா பொழுதுகளிலும்
விழி பார்க்கும் விழிகளும்
அது பேசும் மௌன மொழிகளும்
கன்னம் தாங்கி மூக்கை திருகி
விரல்களால் முகம் வருடி தரும்
மென் முத்தங்களும்
மயிலிறகால் தடவுவது போல்
தலை தடவி இறுத்தி
தோள் சாய்த்து
மார்பில் முகத்தை புதைத்து கொள்ளும்
அணைப்பும்
முதுகு முழுதும் பரவும் அழுத்தமும்
தேவையாக இருக்கிறது
Friday, 21 November 2014
பாதை
வெற்று பாறையாய் இருந்த பொழுதுகளில்
அசைவற்று கிடப்பதே சாஸ்வதம் என்று எண்ணி இருந்தேன்..
போகிற போக்கில் யார் யாரோ சிறிது சிறிதாக நகர்த்த
சிற்ப கூடம் வரை வந்துவிட்டேன்.
சிற்ப கூடத்தின் அழகிய சிலைகள் பார்த்து மயங்கி சிலையாக மாறிட எத்தனிக்க
தன்னை தான் செதுக்கி கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாமல்
சிற்ப கூடத்தை விட்டு போக மனமுமில்லாமல்
சிற்பிகளின் பார்வை பட உளிகளுக்கு பக்கத்தில்..
சிலையாவேனோ இல்லை பாறையாகவே தங்கிடுவேனோ
பாறையாக தனித்திருந்த பொது இல்லாத ஏக்கம்
அழகிய சிலையாக மாறிய பாறைகளை
பார்த்து வருகிறது கூடவே இயலாமையும்...
Subscribe to:
Posts (Atom)