Wednesday, 23 March 2016

வாசம்


அடியாழத்தில் புதைந்து கிடக்கும்
உன் வாசம்
மெல்ல மேலெழும்பி
வரும் தருணங்களில்
முத்தத்தின் ஈரம் உணர்கிறேன்
விழிகளுக்குள்.


===============

என் வாசம் உணரசெய்து
மயங்கி கிறங்கிய பொழுதினில்
மெல்ல மீட்டுகிறாய்
மேனி நோகாமல்
தீண்டல் உணர்ந்து
சிலிர்த்த தேகத்தை
செல்லமாய்
இதழ்களால் வருடுகிறாய்
முத்தத்தின் ஈரம
முழுதும் படரவிடாமல்
பார்வையில்
அங்கமெங்கும் தணல் மூட்டுகிறாய்
உறையவும் விடாமல்
எரியவும் விடாமல்
புலன்களுடன்
கண்ணாமூச்சி ஆடுகிறாய்.
வெற்றி தோல்வி இல்லா
விளையாட்டில்
வென்ற மிதப்பில்
இருவருமே தோற்கிறோம்.. heart emoticon

பிரிவு

விழிகளால் விடைபெற எத்தனித்து
முடியாது போக
வார்த்தைகள் கொண்டு
கோர்க்கிறேன்
தாங்கவியலா பாரத்தை
ஏற்றியது போல்
தடுமாறும் மனதை
தாங்கிபிடிக்க சந்தோஷத்துடன்
விடைபெறுவதாக
சமாதானப்படுத்தி
உன் உள்ளங்கையில் பாரமனைத்தையும்
உணர்த்தி
இதயத்தின் வலியை
விழியிடை நீர் தெரியாமல்
இதழ் மலர்த்தி பிரிகிறேன். heart emoticon

துரோகம்

நின் பாதம் சரணடைந்த
என்னை
மெல்ல நிமிர்த்தி
ஆறுதலாய் தோள்சாய்த்து
அசுவாசப்படுத்தினாய்.
என் விழி நீரை
இதழால் ஒற்றி எடுத்தாய்.
காயங்களில களிம்பாக உனையே பூசினாய்.
ஆற தொடங்கிய ரணங்களை
உவகையுடன் வருடி
தலை சாய்த்து விழி மூடச் செய்தாய்
வருடிய விரலுக்குள்
ஆழமாய் கிழிக்கும்
ஆணி மறைத்து...

Monday, 15 February 2016

முழுமை

உன் பெண்மையும்
என் ஆண்மையும்
பொருந்திய பொழுதுகளில்
உணர தொடங்கியிருந்தோம்
முழுமையின் ரகசியத்தை..

======

எதிர்பார்ப்பின் எச்சங்களை
காயவிடாமல் நனைத்து கொண்டே இருக்கிறது
பேசிய வார்த்தைகளின் ஈரம்..


=====

சிறு பொறி போதுமானதாக இருக்கிறது
சுகித்திருந்த நாட்களை 

துக்கத்துடன் நினைவுறுத்த..

========

எல்லா சந்தோஷத்தையும்
எல்லா துக்கத்தையும் 
எப்படி உன்னிலிருந்து 
என்னிடம் கடத்துகிறாய்
எந்த புறத்தொடர்புமின்றி ..


======

காட்டாறு

காட்டாறின் கதை அறிந்தவர்
கால் வைக்கவும் அஞ்சிடுவர்
காய்ந்திருக்கும் பொழுதில்
கால் நனைப்பவரும்
காத தூரம் கூட பயணிப்பதில்லை
நீந்த தெரியும் என்ற மமதையுடன்
இறங்கியவரும்
சட்டென பெருகும் வெள்ளத்தில் நிலைகுலைய
பயமின்றி
நீரின் போக்கில் பயணிப்பவரை மட்டும்
பத்திரமாக கரை சேர்த்து
தன் வழி செல்கிறது ..

நகர்தல்

தளைகள் மெல்ல மெல்ல அறுபட
வேகமாக ஒடத்தொடங்குகிறேன்.
எல்லைகள் வரையறுக்காமல்
சூழலுக்கு தக்க பொருந்திபோகும்
விவேகத்திலும்
என்னை தொலைத்திடாமல்.
பாதைதெரியா பயணத்தில்
பாலைகள் சோலைகள்
வித்தியாசம் தெரியா
இருளில் முட்டிமோதி
சோர்ந்து விழுந்த போதும்..
வீழ்ந்து கிடக்க விருப்பமில்லாமல்
தட்டுதடுமாறி எழுந்து நிற்க
அனுபவ வெளிச்சம்
கொஞ்சம் வழிகாட்ட
எட்டுதிக்கும் நகர்கிறேன்.
குறிக்கோளில்லா பயணம் பாழ் என யார் சொன்னது
நகர்வே பிரதான சந்தோஷம்...

பலம்

பலகீனத்தின் பலத்தில்
ஜீவித்த உணர்வுகளை
மெல்ல மெல்ல 
வெறுமையிலிருந்து மீட்டு
தீக்கிரையாக்க முயற்சிக்கிறேன். smile emoticon