Saturday 20 July 2013

பெண்ணின் உடை பற்றி விமர்சிக்காத ஆண்களே இல்லை..ஒரு பெண்ணுக்கு அது எந்த மாதிரியான மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதை அறியாமலே.. ஓரிரு நாட்கள் முன் விஜய் எழுதிய பதிவில் நாம் அறியாமல் நம்மை நிர்வாணமாக்கி அதை அம்ப்லப்படுத்த்துபவரை கண்டு நாம் பயப்படக்கூடாது என்று சொல்லியிருந்தார்..

மிக சரி நம்மை அறியாமல் எடுக்கப்படும் படத்துக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டாம்.. ஆனால் இந்த சமூகம் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் அந்த பெண்ணை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி சில சமயம் தற்கொலை வரை கொண்டு போய் விடுகிறது..

பெண்ணிற்கு சிறு வயதில் இருந்து உடை இப்படி இருக்க வேண்டும், (உடனே பொண்ணுங்க எங்கே முழுசா உடுததுறாங்கனு குதர்க்கம் பேசாதீர்கள்)அப்படி இருக்க வேண்டும் உடை உன் முழு உடலையும் மறைக்க வேண்டும். உன் உடல் கணவன் மட்டும் தான் பார்க்க வேண்டும என்ற ரீதியில் வளர்க்கப்படும் போது அவள் சிறு வயதில் இருந்தே அவளையறியாமல் அந்த சுமையை ஆழ் மனதில் சுமக்க தொடங்கிவிடுகிறாள்... அதன் விளைவு தான் அவள் நிர்வாணம் , அரை நிர்வாணம் அவளையறியாமல் வெளியிடப்படும் போது உடைந்து போகிறாள்... அது மட்டுமல்ல
இதனால் அவளுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் உட்பட பல உடல் ரீதியான உபாதைகளை அவள் வெளியில் சொல்லாமல் அது முற்றி மரணத்தில் போய் முடிகிறது...ஒரு பெண் தன் உடல் உபாதையை கூட வெளியில் சொல்ல முடியாத காண்பிக்க முடியாத மன நெருக்கடி எதனால்?

ஒரு பெண் சுயநிலை இல்லாமல் இருக்கும்போது அல்லது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் போது கூட முதலில் அவள் கண்விழித்தவுடன் உடையை தான் சரி செய்வாள்....ஒரு சைக்கிளில் இருந்தோ பைக்கில் இருந்தோ கீழே விழும்போது கூட அடிபட்டதை முதலில் கவனிக்காமல் உடையை தான் கவனிக்கிறாள் என்றால் உடலை தாண்டி உடை பற்றிய சிந்தனை அவள் மனதில் எந்த அளவு ஆழ பதிந்திருக்கு என்று சிந்தியுங்கள்.

மானம், கவுரவம் எல்லாமே முக்கியம் தான் ஆனால் அதைவிட உயிரும் பாதுக்காப்பும் முக்கியம் என்பதை குழந்தை முதல் சொல்லி வளர்ப்போம்...

உடை உடலுக்கு மட்டுமே அதை ஒரு “ கை விலங்காக” நினைக்க வைத்தனால் தான் சில பெண்கள் சுதந்திரத்தின் அடையாளமாக உடையை தேர்ந்தெடுக்கிறார்கள்.. எதிலும் காட்ட முடியாமல் அடக்கப்பட்ட சுதந்திர உணர்வை உடையில் காட்டி தீர்த்து கொள்கிறார்கள்...

இந்த கட்டுரையின் சாராம்சம் எப்படி வேண்டுமானாலும் உடுத்தலாம் என்பது இல்லை..... ஒரு பெண் பிறந்ததில் இருந்து விவரம் அறிந்தத்தில் இருந்து சாகும் வரை இப்படி இரு அப்படி இரு இப்படி உடுத்து அப்படி உடுத்து என்று ஒவ்வொரு நொடியும் அவள் உடலை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவிடாமல் செய்வதை தவிர்க்கலாமே ..........

7 comments:

  1. வாழ்த்துக்கள் கமலி.............தென்றல் அருமையாக வீசட்டும் உங்கள் வாசலில் என்றும்...
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. இந்த பதிவிற்கு தலைப்பு கொடுக்காமல் மறந்துவிட்டீர்கள் என நெனைக்கிறேன் !!!

    ReplyDelete
  3. எதிலும் காட்ட முடியாமல் அடக்கப்பட்ட சுதந்திர உணர்வை தங்கள் உடைகளில் கொட்டித் தீர்த்துக் கொள்கின்றனர். - பொட்டிலடித்த உளவியல் உண்மை…! அருமை…!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா பாபு

      Delete
  4. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்த கருத்தோவியத்தை இன்று தான் நான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது .

    பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் நாகரீகமாக உடை அணிய வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியமே தவிர,
    பெண்கள் இந்த மாதிரி தான் உடுத்தவேண்டும் , இதை தான் உடுத்த வேண்டும் என்று சொல்லி சொல்லி அவர்களை ஒரு விதமான மன அழுத்திலேயே சிறிய வயதில் இருந்து வைத்திருப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய செயல் அல்ல .

    பெண்களின் உடலைப் பற்றிய கவலை ,கவனம் எல்லாம் அவருடைய கணவருக்கும் அவருக்கும் மட்டும் தான் .இதில் மூன்றாவது நபருக்கு கண்டிக்கவோ கருத்து கூறவோ எந்த வித உரிமையும் இல்லை

    பெண்கள் சுயநினைவு அற்ற நிலையில் மற்றவர்கள் செய்யும் தவறான செய்கைகளினால் ஏற்படும் விளைவுகளுக்கு எந்த விதமான முக்கியத்துவமும் யாரும் அளிக்கக் கூடாது .

    கட்டுரையாளர் முடிவாக கூறி உள்ளது போல் ,ஒரு பெண் விவரம் அறிந்ததில் இருந்து சாகும் வரை இப்படி இரு ,அப்படி இரு இப்படி உடுத்து ,அப்படி உடுத்து என்று ஒவ்வொரு நொடியும் அவள் உடலை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் செய்வதை நிச்சயம் தவிர்க்கலாம் .

    பழமையில் ஊறிப் போன முன் தலைமுறை ஆண்கள் அவ்வாறு செய்ய இயலாமல் போனாலும் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் இக்கால இளைஞர்கள் நிச்சயம் தவிர்க்கலாம் ..தவிர்ப்பார்கள் என்றும் நம்புகிறேன் .

    ReplyDelete