மொபைல் அவ்வளவாக ஆக்ரமிக்காத காலகட்டம் அது... என்
பிள்ளைகள் ஸ்கூல் சென்று வந்து கொண்டு இருந்த நேரம்..அலாரம் டைம்பீஸ் தான் எழுப்ப..என்
தம்பி என்னுடன் தங்கி இருந்தான் சென்னையில் ட்ரெயினிங் எதற்காகவோ .சென்னையில்
தங்கி சென்று வந்து கொண்டு இருந்தான்..
ஷிபட் பேஸிசில் வேலை வீட்டு சாப்பாடு தவிர வேறு எதுவும்
சாப்பிடமாட்டான் அப்போது..அதனால் அவனுக்கு ஆறு மணி ஷிப்ட் என்றால் காலை ஐந்து
மணிக்குள் டிபன், சாப்பாடு இரண்டும் கட்டி கொடுத்து விடுவேன்.
ஒரு முறை தீபாவளிக்கு ஊருக்கு சென்று வந்த மறுநாள் காலை
விடிகாலை கிளம்ப அலாரம் வைக்க சொல்லிவிட்டு அவன் தூங்கிவிட்டான் இரவு ..நானும்
தூக்க கலக்கத்தில் அலாரம் நேரத்தை சரியாக கவனிக்காமல் பனிரெண்டுக்கு வைத்து விட்டு
தூங்கி விட்டேன்.. அலாரம் அடித்தவுடன் அவனை எழுப்ப அவன் ஊரில் இருந்த வந்த
அசதியில் இருந்ததால் நேரத்தை கூட சரியாக கவனிக்காமல் நான் எழுந்திருக்காமல்
இருப்பதை பார்த்து என்ன கமலி உடம்பு சரியில்லையா சரி நான் இன்று காலை இட்லி ஏதாவது
சாப்பிட்டு கொள்கிறேன் மதியம் வீட்டில் வந்து சாப்பிட்டு கொள்கிறேன் நீ
எழுந்திருக்க வேண்டாம் என்று சொல்லி போய் குளித்து ட்ரஸ் மாட்டிக்கொண்டு கிளம்பி
விட்டான்
ஒரு மணிக்கு தெரு முனையில் போய் நின்று
இருக்கிறான்..கம்பெனி பஸ் வரவில்லை..பக்கத்தில் இருந்த டீ கடை திறக்கவில்லை..ஏன்
என்று சந்தேகம் வர ஒரு வேளை கடைக்காரர் தீபாவளி காரணமாக கடை மூடி சென்று இருபார்
என்று நினைத்து மேலும் சிறிது நின்று இருக்கிறான்..நேரம் ஆக ஆக அவனுக்கு யாருமே
வரவில்லையே என்ற சந்தேகம் வர கிராஸ் செய்த ஒருவரிடம் மணி கேட்டுள்ளான் அவர் ஒன்றரை
என்று சொல்ல இவன் வீட்டுக்கு வந்துவிட்டான் அப்போது தான் ஹால் கடிகாரம் நின்று
இருப்பது தெரிந்தது..
நான் என்னடா உடம்பு சரியில்லையா திரும்பிட்ட என்று
கேட்க அவன் நீ என்னத்தை அலாரம் வைச்ச மணி என்ன பாரு என்று அவன் சொல்ல நான் பார்க்க
ஐயோ ஒன்றரை தான் ஆகுதா அதான் என்னால எழுந்திருக்கவே முடியலையா என்று சொல்ல
நல்லவேலை நான் குளித்து மட்டும் சென்றேன் இந்த நேரத்தில் நீயும் எழுந்து
சமைச்சிருந்த இன்னும் காமெடியா இருக்கும் பேய் உலாவுற நேரத்துல சமையல் குளியல
சுத்தம் போ என்று சொல்ல அதன் பின் டென்சன் போய் எல்லாரும் சிரித்து கடைசியில்
அன்று அவன் வேலைக்கும் போகல நானும் அதன் பின் தூங்கி லேட்டா எழுந்ததால் என்
பிள்ளைகளும் பள்ளிக்கு போகமால் விடுமுறை தான் எல்லாருக்கும்....
அன்றிலிருந்து இன்று வரை அலாரம் வைக்கும் வேலை மட்டும்
என்னிடம் யாருமே கொடுக்க மாட்டார்கள்...:) J J J
வாழ்த்துக்கள் கமலி.
ReplyDeleteநன்றி கிருத்திகா
Deleteநீங்க வச்ச அலாரத்தால பசங்க சந்தோஷம ஸ்கூலுக்கு ஒருநாள் லீவு போட்டாங்க எங்க அம்மாவும் இருக்காங்களே இப்படி ஒரு நாள் கூட லீவு போடவிடலயே
ReplyDeletehahahahahhaha
Deleteவாழ்த்துக்கள்... கலக்குங்க... :)
ReplyDeleteநன்றி எழுத்தாளரே :)
Delete